தாய் தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் செலுத்த ரூ 10000 வழங்கிய ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்!

தாய் தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு  தேர்வு கட்டணம் செலுத்த ரூ 10000 வழங்கிய ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன்  எல்.ரமேஷ்!

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசுவந்தனை கிராமத்தை சேர்ந்தவர் சத்யாதந்தை,தாய், இழந்த நிலையில் அவர் அவ்வப்போது கிடைக்கும் வேலை செய்து  நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை வணிக மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் பருவத்தேர்வு (Semester Exam) வரக்கூடிய நிலையில் தேர்வுக்கட்டணம் செலுத்தியாக வேண்டிய கட்டாயம்.போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும், உறவினர்கள் உள்ளிட்ட யாருடைய உதவியும் இல்லாத நிலையில் இருந்த சத்யா

யூனியன் சேர்மன் எல்..ரமேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய சூழ்நிலை குறித்தும் கல்லூரி கட்டணம் குறித்தும் கூறினார்.

இன்றைய தினம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் சத்யா வை தொடர்பு கொண்டு யூனியன் அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.10000/_ அளித்து கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்துமாறு அவரிடம் வழங்கினார்.

மேலும் சத்யா வின் கல்வி படிப்புக்காக எப்போதும் தன்னிடம் உதவி கேட்கலாம் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்று சேர்மன் உறுதியளித்தார்.

"நல்ல முறையில் படித்து இந்த சமுதாயத்தில் நல்ல மதிப்புமிக்க துறையில் அதிகாரியாக வரவேண்டும், நீங்கள் அதிகாரியாக வரும் போது உங்கள் நிலைமையில் உள்ளோருக்கு உதவ வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டார்".

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்