ஒட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால் கிராமத்தில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால் கிராமத்தில்  ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி இளவேலங்கால் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் 431 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்ட பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம்ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரிஊராட்சி செயலர் ராஜுகிளைச் செயலாளர் ரமேஷ் இளைஞரணி செல்வராஜ்மனோஜ் மகளிரணி சுசிலாஒப்பந்தகாரர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.