மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு அகற்றும் பணியில் ஈடுபட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூப்பாண்டியபுரம் மற்றும் பாண்டியபுரத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு அங்கு நடைபெற்று மழை நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.
மேலும் தெருக்களில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கிய இடங்களில் மழைநீர் விரைவாக வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் உதவி பொறியாளர் ரவி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.