ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம் - அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் ஆணைக்கினங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலருமா அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில்
இன்று 20/09/24 ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூர் தனியார் திருமண மஹாலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான சண்முகையா தலைமையில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் முன்னிலையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்; தமிழகத்தில் மகளிர் மாணவ மாணவிகள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்க்கை உயர வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிர்க்கான விலையில்லா பேருந்து பயணம், பள்ளி மாணவ மாணவியருக்கான காலை உணவுதிட்டம் என பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியும் தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும்
நிறைவேற்றி வருபவர் தான் நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சியினரும் டெபாசிட் இழுத்து படு தோல்வியை சந்தித்தனர் அதே நேரத்தில் தமிழகத்தில் 39 பாண்டிச்சேரி 1 என்ற 40க்கு 40 என்ற வகையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை போல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் இலக்கான 200 க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற நீங்கள் தான் அதற்கான பணிகளை சிறப்பாக செய்திட வேண்டுமெனவும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஒரு பணி எடுத்து கொண்டால் உணவு உண்ணாமல் கண் தூங்காமல் சிறப்பாக பணி செய்யக்கூடியவர் எனவே அவருடன் இணைந்து சிறப்பாக பணி செய்திட வேண்டும் என பொது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன் லட்சுமணன் சிவன் ஜெயலட்சுமி மாவட்ட பிரதிநிதிகள் ஜோசப் மோகன் தங்ககுமார் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் மருத்துவர் அணி தங்கவேல்சாமி சிறுபான்மை அணி ஞானதுரை வர்த்தகர் அணி முத்துக்குமார் மாணவரணி தங்கதுரைபாண்டியன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பார்வதி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள்,பிரதிநிதிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.