முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை புதியம்புத்தூர் TNDTA அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டு முதல்வரின் காலை உணவு திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான இன்று திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி தொடங்கி வைத்தார்.
அதன்படி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர் TNDTA அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளோடு அமர்ந்து காலை உணவு அருந்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுரேஷ் யூனியன் ஆணையாளர் வசந்தா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ் வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன் மகாலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியை கிரீட்டா ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் நகர செயலாளர் லிங்கராஜ் வர்த்தகர் அணி முத்துக்குமார் சிறுபான்மை அணி ஞானதுரை கிளை செயலாளர் திரு.சற்குண பாண்டியன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி புதியம்முத்தூர் சுப்பையா கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வி ஊராட்சி செயலர் உத்திரகணி மற்றும் கழக நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..