ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ செல்வ விநாயகர்,அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் ராஜ் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி விவசாய அணி அழகுராஜ் ஊர் நாட்டாமை சண்முகசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.