ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆரைக்குளம் பிச்சை மதகு வரத்துகால்வாய், கொம்பாடி உப்பாற்று ஓடை பகுதிகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆரைக்குளம் பிச்சை மதகு வரத்துகால்வாய், கொம்பாடி உப்பாற்று ஓடை குலசேகரநல்லூர் ஊராட்சி குயவன்குளம், நொச்சிகுளம், செவல்குளம், வேப்பங்குளம், கரிசல்குளம், கூலிக்குளம், புதுப்பச்சேரி செவல்குளம், ஆரைக்குளம் பிச்சை மதகு வரத்துகால்வாய், கொம்பாடி உப்பாற்று ஓடை, போன்ற பகுதிகளில் இரு தினங்களாக கனமழை பெய்ததன் காரணமாக கண்மாய்கள் ஓடைகளில் நீர் இருப்பு குறித்தும் வெளியே செல்லும் நீரின் அளவு குறித்தும் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல் ரமேஷ் சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல் ரமேஷ் குளங்களில் உள்ள தற்போதைய நீர் இருப்பு குறித்து கேட்டறிந்து அதிகாரிகளிடம் மழைக்காலங்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் விதிமுறைகளை பின்பற்றி விரைந்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மண்டல உதவி திட்ட இயக்குனர் நாராயணன் அவர்கள், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சசிகுமார், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சித்தார்த்தன், ஒன்றிய பொறியாளர் ஜெயபால், கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார்,ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, விவசாய அணி கருப்பசாமி,மற்றும் அதிகாரிகள் கட்சியின் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.