ஒட்டப்பிடாரம் அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 34 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா பள்ளி குழந்தைகளுடன் இணைந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அக்காநாயக்கன்பட்டி வடக்கு காலனியில் சுமார் 22 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் 6.23 லட்சம் மதிப்பீட்டில் 25 KVA திறன் கொண்ட மின்மாற்றியை இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மாநகராட்சி பொறியாளர் ரெங்கநாதன் மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்கொடி கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஊராட்சி செயலாளர் ராஜன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் இளைஞரணி மகேஷ் ஆகாஷ் தகவல் தொழில்நுட்ப அணி ரமேஷ் கிளைச் செயலாளர்கள் இளையராஜா இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.