ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மழைமானியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மழைமானியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அமைக்கப்பட்டு இருந்த மழைமானியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் சென்று தமிழக அரசின் திட்டங்களான முதியோர் உதவித்தொகை மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், நிலஅளவை பிரிவில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற மனுக்கள் குறித்தும், மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் ஆதார் சேவை மையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு, பொதுமக்களின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.