ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அரசு அலுவலர்கள் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அறிக்கை.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அரசு அலுவலர்கள் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அறிக்கை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைக்கிணங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது அறிவுறுத்தலின்படியும்

இன்றைய தினம் (12-12-2024 )புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது தூத்துக்குடிக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கும் நிலையில் மேலும் அதிக கனமழை பெய்யும் என்பதால்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள் ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, திருவைகுண்டம்,கயத்தார் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஒட்டப்பிடாரம்,தூத்துக்குடி, கருங்குளம்,திருவைகுண்டம் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள்,தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலம், வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை,மின்சாரத்துறை,குடிநீர் வடிகால் வாரியம்,சுகாதாரத்துறை,நீர்வளத்துறை,நெடுஞ்சாலைத்துறை ,பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை சார்ந்த அலுவலர்களின் கவனத்திற்கு 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கொடுத்துள்ள அறிக்கையில் ;

பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக மழை நீரை வெளியேற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் கலியாவூர்,மருதூர் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக கனமழை குறித்த முக்கிய தகவல்களை விரைந்து தெரியப்படுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

பொதுமக்களிடமிருந்து வரும் அவசர கோரிக்கைகள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மழைநீர் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக அரசு முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மின்சாரம் உணவு உள்ளிட்டவை எவ்வித தடையும் இன்றி கிடைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை சார்ந்த அலுவலர்களையும் 

அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் அவர்களது தலைமையிட அலுவலகத்தில் இருந்து கனமழை குறித்த விபரங்களை கண்காணிக்குமாறு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தனது அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.