கனமழை வெள்ளத்தால் விவசாயம் செய்த பயிர்கள் பாதிப்பு - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

கனமழை வெள்ளத்தால் விவசாயம் செய்த பயிர்கள் பாதிப்பு - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் தாலுகா பரிவில்லிக்கோட்டை குறுவட்டம் கல்லத்திக்கிணறு கிராமத்தில் விவசாயம் செய்த பயிர்கள் மழை வெள்ளத்தால் பதிப்பு அடைந்ததை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா  நேரில் சென்று பயிர்களை பார்வையிட்டார்.

 வேளாண்மைதுறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது உதவி வேளாண்மை அலுவலர் மாயாண்டி பரிவில்லிகோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் கிளை செயலாளர் ஆரோக்கியசாமி கல்லத்திக்கிணறு சஞ்ஜீவன் செல்லத்துரை குட்டிபுலி அலெக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்