ஒட்டப்பிடாரம் இளவேலங்கால் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் கிராமத்தில் 24 லட்சம் மதிப்பீட்டில் 60000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி மற்றும் 8 லட்சம் மதிப்பீட்டில் 10000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாவித்ரி அருண்குமார் ஊராட்சி செயலர் ராஜு தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் இளைஞரணி விக்னேஷ் மகளிரணி பழனியம்மாள் சுசிலா கிளை செயலாளர்கள் ரமேஷ் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.