தூத்துக்குடி மாநகராட்சி ஹவுசிங் போர்டு காலனியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் உடனடியாக அகற்ற ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நடவடிக்கை.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு மழை நீரை உடனடியாக வெளியேற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மோட்டார்களை உடனடியாக வரவழைத்து மழைநீரை அகற்றும் பணியை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையாளர் சுரேஷ் குமார் அன்னை இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கசாமிவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் மாவட்ட பிரதிநிதி பூவேஸ்நாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் உடன் இருந்தனர்.