திருவைகுண்டம் தாமிரபரணி ஆறு மருதூர் அணைக்கட்டில் நீர் இருப்பு குறித்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவைகுண்டம் தாலுகா தாமிரபரணி ஆறு மருதூர் அணைக்கட்டில் நீர் இருப்பு குறித்தும் அதனைத் தொடர்ந்து சென்னல்பட்டி கிராமத்தில் மருதூர் மேலக்கால் உபரி நீர் போக்கி மற்றும் பாலத்தினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் கீழ புத்தனேரி கல்லடியூர் ஆகிய கிராமங்களில் சாலை வசதி செய்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சஞ்சய் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கிளைக் கழக செயலாளர் சுந்தர் அருணாச்சலம் அய்யாக்குட்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.