ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கரிசல் மண் வண்டல் மண் எடுப்பற்கான ஆணைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.

ஒட்டப்பிடாரம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கரிசல் மண் வண்டல் மண் எடுப்பற்கான ஆணைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக குளங்கள் மற்றும் விளை நிலங்களில் இருந்து கரிசல் மண் மற்றும் வண்டல் மண் எடுப்பற்கான ஆணைகளை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு அதற்கான ஆணைகளை விவசாயிகளிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலக கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.பின்னர் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர்கள்சுரேஷ் செல்வகுமார்யூனியன் ஆணையாளர் வசந்தாவட்டார வளர்ச்சி அலுவலர் கிரி துணை வட்ட வளர்ச்சி அலுவலர் துரைராஜ் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி சண்முகராஜ் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.