நெல்லை தூத்துக்குடி பயணிகள் ரயில் கால நேரத்தை மாற்றி அமைக்க ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ வேண்டுகோள்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பயணிகள் ரயிலில் தூத்துக்குடியிலுள்ள கல்வி நிலையங்களில் படிப்பதற்கு மாணவ, மாணவியர்கள் அதிகளவில் செல்கின்றனர். அரசுத் துறைகளில் பணியாற்றுகின்ற அலுவலர்களும், தனியார் துறையில் பணியாற்றுகின்ற அலுவலர்களும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்புற கிராம மக்களும் இந்த ரயில் சேவையை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை 7:30 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு கிளம்புகின்ற பாசஞ்சர் ரயிலை முன்னதாக 7:10 மணியளவில் கிளம்பும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்று, மாணவர்களும் பொதுமக்களும் சண்முகையா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.
மாணவர்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் பயன் பெறும் வகையில் 30 நிமிடங்களுக்கு முன்பாக ரயிலை இயக்க வலியுறுத்தி தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தாவை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார். ஆய்வு செய்து மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ரயில் கால நேரத்தை மாற்றுவதாக ரயில்வே உயரதிகாரிகள் சண்முகையா எம்எல்ஏவிடம் உறுதி அளித்தனர்.