கூட்டுடன்காட்டில் புதிதாக கட்டப்பட்ட உராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சியில் தேசிய சுயாட்சி திட்ட நிதி ரூ 23.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட உராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட்ராஜா பானு உதவி பொறியாளர் ரவி ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி ஒன்றிய கழக துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு ஊராட்சி மன்ற தலைவர்கள் மாங்கனி சித்திரை செல்வன் ஆனந்தகுமார் முத்துலட்சுமி மகேஷ்வரி முத்துமாரியப்பன் ஜாக்சன் துரைமணி ஆனந்தி மாரிசெல்வன் பாலசுப்ரமணியன் துணை தலைவர் முத்துலட்சுமி கிளை செயலாளர்கள் சீனிவாசன் சேரந்தையன் வள்ளிநாயகம் ராஜ்குமார் ஊர் பிரமுகர்கள் வேலாயுதம் ராமசுப்பு ராஜேந்திரன் தயாளன் அய்யாதுரை மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.