ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஸ்பிக்நகர் பகுதி அன்னை இந்திரா நகர் பகுதி வாக்குசாவடி பாக முகவர்கள் (BLA 2) கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெருநாழி போஸ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஸ்பிக்நகர் பகுதி அன்னை இந்திரா நகர் பகுதி வாக்குசாவடி பாக முகவர்கள் (BLA 2) கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் பெருநாழி போஸ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி 

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஸ்பிக்நகர் பகுதி வாக்குசாவடி பாக முகவர்கள் (BLA 2) ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகர் பகுதி அலுவலகத்திலும் அன்னை இந்திரா நகர் பகுதி பாக நிலை முகவர்கள் கூட்டம் முத்தம்மாள் காலனி சமுதாய நலக் கூடத்திலும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ்  கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் சிவக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் மாடசாமி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.