தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு இன்று மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு இன்று மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

அதனை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது திருவுருவ படத்திற்கு மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.