ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் :விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் எட்டையாபுரம் - விளாத்திகுளம் - வேம்பார் மாநில நெடுஞ்சாலையில் மரங்கள் நடும் விழாவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் தொழிலதிபர் ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை எபனேசர்,ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,தங்கவேல் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,ஒன்றியகுழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ஆண்டாள்,பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி,கழுகாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,மகேந்திரன் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன்,மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்,மரங்கள் மக்கள் இயக்கம் அமல்ராஜ்,உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.