புத்தொழில் களம் என்ற தலைப்பில்,சமூகத்தை மாற்றலாம், ஒன்றாக முன்னேறலாம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளம் தொழில் முனைவோர் பங்கேற்க - கனிமொழி கருணாநிதி எம்பி அழைப்பு!..

புத்தொழில் களம் என்ற தலைப்பில்,சமூகத்தை மாற்றலாம், ஒன்றாக முன்னேறலாம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளம் தொழில் முனைவோர் பங்கேற்க - கனிமொழி கருணாநிதி எம்பி அழைப்பு!..

புத்தொழில் களம் என்ற தலைப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் மேம்பாடு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் மூலமாக, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் #Social_Start-Ups ஐ உருவாக்க, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட இளம் தொழில்முனைவோர்களின் திறமைகளை ஊக்குவித்து வளர்க்க திட்டமிட்டுள்ளோம்

உங்கள் எண்ணங்களுக்கு வலிமை சேர்த்து சமூக நலன் சார்ந்த கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற துறைகளல் உள்ள சவால்களுக்குத் தீர்வுகாண இது ஒரு நல்வாய்ப்பு

நிலைத்தன்மை மற்றும் சமூக நன்மைக்காகப் புதுமையான யோசனைகளுடன் மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஆர்வமுள்ள 18-35 வயதுடைய இளம் தொழில் முனைவோரை தேடி வருகின்றோம். விண்ணப்பங்கள் தனியாகவோ சமர்ப்பிக்கலாம்.

தேர்வாகும் சிறந்த மூன்று திட்டங்களுக்கு, தலா 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்