தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டம்.
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை விழா பண்டாரவிளை கிராமத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல்,முன்னாள் மத்திய வங்கி தலைவர் சுதாகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள்,தூத்துக்குடி 39வது வட்டக் கழக செயலாளர் திருச்சிற்றம்பலம், மற்றும் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர்அணி இணைச்செயலாளர் டைகர் சிவா, அருணா பைனான்ஸ் பழனி குமார், திலகர் ஆகியோர் ஏற்ப்பாட்டில் 50 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடி மண்டல செயலாளர் கல்வி குமார் , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தன்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி என பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி தங்களது வாழ்த்துகளை நேரில் தெரிவித்தனர்.