தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட இராமேஸ்வரம் நகர் தலைமை சார்பில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் தளபதி விஜயின் 50-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு,மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனையின் படி,இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா,வழிகாட்டுதலின்படியும்இராமநாதபுரம் மாவட்ட இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட இராமேஸ்வரம் நகர் தலைமை சார்பில் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிளஸ்டிக் குடம் மற்றும் புடவைகள் என நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைமை மலர்வழி ஜெயபாலா, தகவல் தொழில்நுட்பத் துறை ராமநாதபுரம் மணி சங்கர், கோவிந்தராஜ், நகர் தலைவர் கோபி, சாரதி, நகர் செயலாளர் ஸ்டீபன், நகர துணை செயலாளர் கோபிகிருஷ்ணா, நகர் பொருளாளர்கர்ணன் நகர் இளைஞர் அணி தலைவர் மாவட்ட துணைச் செயலாளர் N. மணிகண்டன், குமார் நகர்துணைத் தலைவர் உள்பட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.