அமுத கவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு : எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை
அமுத கவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரதுநினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின்படி அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சீறாப்புராணம் எழுதிய அமுதகவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன். எட்டயபுரம் நகர அதிமுக அவை தலைவர் சேனா கணபதி. பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி. ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் சாந்தி. வார்டு பிரதிநிதி வேலுச்சாமி ஐஸ் முனியசாமி.. கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.