கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் அவர்களின் 152 பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமக சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் தியாகி வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ்,மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ், குமார் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.