வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு வ.உ.சி பேரவை திருச்சிற்றம்பலம் மற்றும் டைகர் சிவா ஏற்பாட்டில் 300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் வழங்கினார்.
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்டம் வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி செப் 5 சுதந்திரப் போராட்ட வீரரும் சுதேசி கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில இளைஞரணி செயலாளரும் அதிமுக வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம், மற்றும் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் 300க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா. ஹென்றி, வழக்கறிஞர் பிரபு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ் கே.ஜே.பிரபாகர், பகுதி கழகச் செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பிள்ளை விநாயகம், மற்றும் வக்கீல்கள் முனியசாமி, சரவண பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதி மணி சத்ய லட்சுமணன், செண்பகச் செல்வன், ஜான்சன் தேவராஜ், முருகானந்தம், பி ஜே சி சுரேஷ், பரிபூரண ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.