தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பொதுமக்கள் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு உறுப்பினர் ரெங்கசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி தலைமையில் வட்டச் செயலாளர் தெய்வேந்திரன் முன்னிலையில் தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் கல்விக்கண் திறந்த தந்தை காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஹவுசிங் போர்டு நலச் சங்க சட்ட ஆலோசகர் விஜய சுந்தர், சீனிவாசா பெட்ரோல் பங்க் உரிமையாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் தங்கமணி ஏஜென்சி ஜெயசேகர், ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜவகர் பால்ராஜ் மற்றும் ஹவுஸிங் போர்டு காலனி பொதுமக்கள் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.