தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மேயர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மேயர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி VE சாலை வ உ சி மார்க்கெட் முன்பு அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி வழக்கறிஞர் எஸ் ஜோயல் காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் VE சாலை வ உ சி மார்க்கெட்டி முன்பு அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக அதிமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.