வாஞ்சிநாதன் 113 வது நினைவு நாளை முன்னிட்டு அறவோர் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்து முன்னணி சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வாஞ்சிநாதன்  113 வது நினைவு நாளை முன்னிட்டு அறவோர் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்து முன்னணி சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வாஞ்சிநாதன் 113 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவில் வாயிலில் முன்பாக நினைவு கூறும் விதமாக அவரது புகைப்படம் வைத்து மோட்ச தீபம் ஏற்றி அன்னதானம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வீர மரணம் அடைந்த வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையம் வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அறவோர் முன்னேற்றக் கழக மாநில துணைத்தலைவர் முத்துசிவம்,மாநில செயலாளர் திருநெல்வேலி சுரேஷ் சிவம்,பூசாரி பேரவை மாநில தலைவர் சாஸ்தா,இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா,விஜயராகவன் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவருக்கு வெண்கலத்தில் ஆன திருவுருவ சிலை அமைக்க மத்திய மத்திய,மாநில அரசுகளுக்கு இந்து முன்னணி மற்றும் அறவோர் முன்னேற்றக் கழகம் சார்பாக கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.