முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆதரவு அற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையன்ட் நகர் 1 வது தெரு பகுதியில் அமைந்துள்ள நேச கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் படி அங்கு உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, மருத்துவர் அணி அருண்குமார், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், ஜான், கோகுல், செல்வம், பெனில், பால்ராஜ், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்