சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்கமகன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பாக தங்க மோதிரம் அணிவித்து கொண்டாட்டம்.
தூத்துக்குடி மாவட்ட தங்கமகன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பாக சூப்பர் ரஜினிகாந்த் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட தங்கமகன் ரசிகர் மன்ற நிர்வாகிகளான துரைராஜ் , வக்கீல் ரமேஷ்பாண்டியன், சூர்யா, வேல்முருகன்,மோகன், தாளமுத்து, அந்தோணிபிச்சை,சங்கரேஸ்வரன், பென்சிகர், பகலவன் டக்ளஸ் , ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு தங்க மோதிரம் அணிவித்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல உரிமை அமைப்பாளர் IJK-தென்மண்டல இணை செயளாலர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பள்ளிவாசல், மாதாகோயில், சிவன் கோவிலில் நீண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் பிரார்த்தனைகளும் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.