தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முதல் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இந்த உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாநகரில் மண்டல வாரியாக பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 39 ஆவது வார்டு பகுதி வடக்கு ரத வீதி மேற்கு ரத வீதி சந்திப்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமை கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி தலைமையில் பா ஜ க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உஷா தேவி,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவ குமார் தேவ குமார், கிழக்கு மண்டல துணைத்தலைவர் லட்சுமி வேல்கனி, மண்டல பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர்கள் வன்னிய ராஜன், சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கம், பாலாஜி, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன்,கிளை தலைவர் சங்கர், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று முதல் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறும்.