தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை , இனிப்பு மற்றும் பட்டாசுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும்,39வது வட்டக் கழக செயலாளர் திருச்சிற்றம்பலம், மற்றும் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர்அணி இணைச்செயலாளர் டைகர் சிவா ஆகியோர் ஏற்பாட்டில் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள அன்னை கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு மற்றும்பட்டாசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் கலந்து கொண்டு கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சரவண பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.