குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழ சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் தின சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகளை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் செயின்ட் மேரிஸ் கருணை இல்ல இயக்குநர் சகோ. அல்பர்ட் சேவியர், பள்ளி தாளாளர் சகோ. ஆரோக்கியம் பீட்டர், மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) காயத்திரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தைகள் நலகுழு தலைவர் ரூபன் கிஷோர், குழந்தைகள் நல குழு அலுவலர் ஜேம்ஸ், நலகுழு உறுப்பினர்கள் சித்தி ரம்ஜான், டார்லிங் பியூலா, அரசகுமார், தலைமை ஆசிரியர் சகோ. மரிய அந்தோணி ஜோசப், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.