தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தலின்படி.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 1 வது தெரு பகுதியில் அமைந்துள்ள நேசக்கரங்கள் சிறுவர் சிறுமியர் ஆதரவற்றோர் இல்லத்திலும் பிரையன்ட் நகர் 3 வது தெரு பகுதியில் அமைந்துள்ள செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் சிதம்பரம் நகர் நான்காவது தெரு பகுதியில் அமைந்துள்ள நேசக்கரங்கள் முதியோர் இல்லத்திலும் டி எம் பி காலனி பிளசிங் முதியோர் இல்லத்திலும் மதிய உணவு வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா,மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி,விஜயலட்சுமி, அவை தலைவர் பால்சாமி,சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங், பிரையன்ட் நகர் பகுதி கழக மாநகர பிரதிநிதி செல்வம், இலக்கிய அணி மாநகரத் துணை அமைப்பாளர் பால்ராஜ், பகுதி கழக மாநகர பிரதிநிதிகள் சுகன்யா செந்தில், சுரேஷ் ,மாரிமுத்து, பெனில், மணி வேலுச்சாமி சோலையப்பன் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.