தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் "தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக" என்ற முன்னெடு மையத்தை எம்பி கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு பொருட்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஏற்கனவே சோதனை முயற்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் தாங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத பொருட்களை தேவைப்படுவோர்க்கு வழங்கும் முயற்சியை தொடங்கியது. இதன் காரணமாக மாநகர் மக்கள் பலர் பயன் பெற்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நிரந்தரமாக இதற்கென்று "தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக" என்ற முன்னெடு மையத்தை தொடங்கியுள்ளது. இதனை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பொருட்கள் வழங்கினார்.
ஆகையால் மாநகர மக்கள் தாங்கள் பயன்படுத்திய மற்றவர்களுக்கு பயன் பெற உபயோகமான மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள், பேக்குகள், சீருடைகள், போர்வைகள், காலணிகள், பாத்திரங்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை இந்த மையத்தில் வைத்திடுமாறும். தேவைப்படுவோர் இம்மையத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமார் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்.