தமிழக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வக்கீல் ரமேஷ்பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் ஹரிஹரன் ஆலோசனையின் பேரில் இன்று 16/07/24 தூத்துக்குடியில் வைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கு வக்கீல் ரமேஷ்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டு செல்வதற்காக பேக்குகளை வக்கீல் ரமேஷ் பாண்டியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட சட்ட ஆலோசகர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், மற்றும் தமிழக பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.