தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சுமுத்து வழங்கினார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சுமுத்து வழங்கினார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் ஹரிகரன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார் சட்ட ஆலோசகர் ரமேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சுமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், நோட்டு, பேனா உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட சட்ட ஆலோசகர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலா மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.