தூத்துக்குடி தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பங்குத் தந்தை வின்சென்ட் கோடை கால தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக  பங்குத் தந்தை வின்சென்ட் கோடை கால தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் காமராஜ் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் மற்றும் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்குத்தந்தை வின்சென்ட் கலந்துகொண்டு கோடை கால தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காமராஜ் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன், செயலாளர் செல்வ சேகர், பொருளாளர் தேவ திரவியம், துணை செயலர் நீக்குலாஸ் மற்றும் வின்னர் மகாராஜா, அந்தோணி பிச்சை, மணி, சக்தி, மிக்கேல்ராஜ், தொழிலதிபர் பன்னீர், மாவட்ட நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை காமராஜ் நற்பணி மன்ற அமைப்பாளர்கள்  அசோகன் மற்றும் லாரன்ஸ் சிறப்பாக  செய்திருந்தனர்.