தூத்துக்குடி ஹவுஸிங் போர்டு காலனி ஐ என் டி யூ சி ஆட்டோ ஸ்டாண்ட் சங்கம் சார்பில் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏபிசிவி சண்முகம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி ஐ என் டி யூ சி ஆட்டோ ஸ்டாண்ட் சங்கம் சார்பில் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையிலும் தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு மன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி வழக்கறிஞர் விஜய சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ பி சி வி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் இனிப்புக்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐ என் டி யூ சி தலைவர் ராஜ் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத் தலைவர் பரமசிவன் செயலாளர் முருகராஜ் பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.