தூத்துக்குடி அதிமுக எட்டயபுரம் நகர கழகம் சார்பில் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம் எல் ஏ திறந்து வைத்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பின்படி கோடைகால வெயிலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை மாவட்ட முழுவதும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி இன்று தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எட்டயபுரம் நகர கழக செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டின் பேரில் எட்டையாபுரம் பாரதியார் பேருந்து நிலையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர்,தர்பூசணி,ஆரஞ்சு,அண்ணாச்சிபழம்,ஆகிய பழவகைகளையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,மகளிர் அணி செல்வி, சாந்தி, அவை தலைவர் கணபதி வார்டு செயலாளர்கள் கருப்பசாமி,சிவசங்கர பாண்டியன்,சின்னத்துரை,சொக்கன்,மோகன்,ஜஸ் முனியசாமி, முனியசாமி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.