எட்டயபுரத்தில் ஜனவரி 17 தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு,2024 ம் ஆண்டின் முதல் பொதுக்கூட்டம் : அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு எட்டையாபுரம் நகர கழகச் செயலாளர் ராஜகுமார் அழைப்பு!.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஜனவரி 17 தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் 2024 ம் ஆண்டின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ MLA தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P சின்னப்பன் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியின் வளர்ச்சி ஒன்றே குறி கோளாய் கொண்டு வாழ்ந்து வரும் கழகத்தின் ஆணிவேராக திகழும் அதிமுக வின் தொண்டர்கள் அனைவரும் திரண்டு வந்து மறைந்தும் மறையாமல் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் சேர்க்க வருகை தரும்படி எட்டயபுரம் அதிமுக நகர கழகச் செயலாளர் ராஜகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.