பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அக்காநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆணைப்படி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அக்காநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி மகளிரணி காளியம்மாள் நித்யா இளைஞரணி மகேஷ் ஆகாஷ் கிளைச் செயலாளர்கள் அனந்த ராமகிருஷ்ணமூர்த்தி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.