புதிய பேருந்து சேவை - அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து வைத்தார்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து சேவையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையத்தில் இருந்து மகளிர் இலவச பேருந்து தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மில்லர் புரம், கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, மற்றும் குலையன்கரிசல் வரையும் மற்றும் கோவில்பட்டியில் இருந்து புறப்பட்டு நாலாட்டின்புதூர், வானரமுட்டி, குமாரபுரம், கழுகுமலை, ஆலங்குளம், ஆத்திப்பட்டி, குருவிக்குளம், வழியாகவும் செல்லும் இரண்டு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், கதிரேசன், கிழக்கு மண்டல தலைவர் கலைச் செல்வி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ஜெயஸிலி, சரவணகுமார், முன்னாள் கவுன்சிலர் பாலு, வட்ட செயலாளர் மூக்கையா, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார்,முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், தூத்துக்குடி மண்டல போக்குவரத்துதுறை பொது மேலாளர் பாலசுப்ரமணியன், கிளை மேலாளர் ரமேஷ் கார்த்தி, தொமுச நிர்வாகிகள் கருப்பசாமி, லிங்குசாமி, முருகன், மனோகரவேல், சரவணன், படையப்பா கணேஷ், ராஜேந்திரன், சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.