புதிய வருடம் 2025 பிறப்பு - தவெக கட்சியின் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அஜிதா ஆக்னல் பரிசு பெட்டகங்களை வழங்கினார்
2025 ஆம் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
2025 ஆம் பிறப்பை முன்னிட்டு எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி சின்னகோவிலில் ஆகிய திருத்தலங்களுக்கு நேரில் சென்று எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் இறைவனிடம் வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் புது வருடத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் புத்தாடை ,பவுடர்,சோப்பு, எண்ணெய், அடங்கிய பரிசு பெட்டகத்தை மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார்.
மேலும் மில்லர்புரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதியம் அறுசுவை உணவான பிரியாணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.