புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை- எம்பி கனிமொழி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையினை திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்து பொது மக்களுக்கு அரிசி,சீனி,ஆயில்,பருப்பு, உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ்,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காசி விஸ்வநாதன், குறுக்குச்சாலை ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.