தூத்துக்குடி அதிமுக சார்பில் முத்தையாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அதிமுக சார்பில் முத்தையாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பின்படி கோடைகால வெயிலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியை மாவட்ட முழுவதும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி தூத்துக்குடி முத்தையா புரம் அதிமுக நிர்வாகிகள் கோட்டாளமுத்து,ஜெகதீசன்,கோபி,சீனிவாசன்,மனோகர்,சிவசாமி, கழக பேச்சாளர் அனல் ராஜசேகர்,மூக்குத்துரை,ராமர்ஆகியோர் ஏற்பாட்டில்.முத்தையாபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர் பந்தலை.கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், மோர்,தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் S.T கருணாநிதி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன்,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P T R ராஜகோபால் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்,வட்ட செயலாளர்கள் மில்லர்  R L ராஜா துரைசிங்,மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்  என்.சிவசுப்பிரமணியன்,இயக்குனர் பாலசுப்ரமணியன்,அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணை செயலாளர் சங்கர்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன்,சுப்புராஜ்,காசி,அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிஊர் காவலன்,அரசு,ராஜா,தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஹரி,நிர்மல்,சுடலைமணி,வினோத்,சதிஷ், உட்பட கழக நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.