புதியம்முத்தூர் தனசிங் உடல் உறுப்புகள் தானம் - அமைச்சர் கீதா ஜீவன் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல்.

புதியம்முத்தூர் தனசிங் உடல் உறுப்புகள் தானம் - அமைச்சர் கீதா ஜீவன் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல்.

புதியம்புத்தூர் புஷ்பா நகரைச் சார்ந்த தனசிங் வயது ( 21) சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு அவரது குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் உடல் உள்ளுறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டது.

அன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று புதியம்புத்தூர் புஷ்பா நகர் பகுதியில் உள்ள தனசிங் வீட்டிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.