உலக சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமைப்படை மற்றும் தூத்துக்குடி ALL CAN TRUST சார்பில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
உலக சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமைப்படை மற்றும் தூத்துக்குடி ALL CAN TRUST சார்பாக மரம் நடு விழா 05.06.2024 புதன் கிழமை மாலை கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளி தாளாளர் வழக்கறிஞர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.பள்ளியின் முன்னாள் மாணவரும் ALL CAN TRUST தலைவருமான வழக்கறிஞர் மோகன்தாஸ் மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச் சூழல் தின சிறப்பினை பற்றி எடுத்துரைத்தார்.
இதில் புங்கை,வேம்பு போன்ற மரங்களும், பப்பாளி,கொய்யா,பலா, எலுமிச்சை போன்ற பழ வகை மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், பிரவின், கோபி, பிரசன்னா, ALL CAN TRUST உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள்,அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.