திருச்செந்தூர் நகராட்சி சொத்து வரியை திரும்பப் பெறக்கோரி நம் தமிழர் கட்சி வலியுறுத்தல்.

திருச்செந்தூரில் பானர் சமுதாய மண்டபத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தொகுதி தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார்,தொகுதி பொருளாளர் அன்சார் அலி, வணிகர் பாசறை இணைச்செயலாளர்கள் கே.ஆர் மில்லர், ராம்குமார், ஒழுங்கமைப்பு செயலாளர் ஞானசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர், உடன்குடி தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் கூடு தாழை தூண்டில் வளைவு அமைக்கக் கோரி 15 நாளாக நடைபெறும்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவ தெரிவிக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஒன்றியச் செயலாளர் சுந்தர் நன்றி கூறினார்.